மெட்டா நிறுவன பங்குகள் வீழ்ச்சி - உலக பணக்காரர்கள் பட்டியலில் 13-வது இடத்துக்கு இறங்கிய மார்க் ஜக்கர்பெர்க்!

0 2718

மெட்டா நிறுவன பங்குகள் தொடர் விலை வீழ்ச்சியால் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் வரிசையில் 13-வது இடத்தை பிடித்தார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயனர்கள் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை 26 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதனால் 82 புள்ளி 5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் மார்க் ஜக்கர்பெக் 13-வது இடத்திற்கு பின்தங்கினார்.

91 புள்ளி 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி 10-வது இடத்தை பிடித்து ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனார். முகேஷ் அம்பானி 89 புள்ளி 2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 11-வது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments