பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான முதலமைச்சர் வேட்பாளர் யார்?.. நாளை அறிவிக்கிறார் ராகுல்காந்தி

0 3389
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான முதலமைச்சர் வேட்பாளர் யார்?

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அக்கட்சியின் எம்பியான ராகுல் காந்தி நாளை லுதியானாவில் அறிவிக்க உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க தற்போதைய முதலமைச்சர் சரஞ்சித் சிங் சன்னிக்கும் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவரான நவஜோத் சித்துவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பஞ்சாப் தேர்தல் பிரச்சாரம் செய்ய அங்கு செல்லும் ராகுல் காந்தி முதலமைச்சர் வேட்பாளரின் பெயரை அறிவிக்க உள்ளதாக அக்கட்சியின் பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்திரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments