இ பாஸ்போர்ட் கூடுதலான பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும் - அமைச்சர் ஜெய்சங்கர்
இ பாஸ்போர்ட் முறை கூடுதலான பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
பயோ மெட்ரிக் முறையில் பயன்பாட்டுக்கு இ பாஸ்போர்ட் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. வழக்கமான காகித பாஸ்போர்ட்டை விட இது கூடுதலான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் டேட்டா கையெழுத்து மற்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்து வழக்கமான பாஸ்போர்ட்டில் பயன்படுத்துவது போல விவரங்களை சரிபார்க்க முடியும் என்றும் ஜெய்சங்கர் விளக்கினார்.
இது முற்றிலும் பாதுகாப்பானது என்றும் வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
Comments