ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று... சாம்பியன் பட்டம் யாருக்கு?

0 6977

19வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் முதல் இடம் பிடித்த இந்திய அணி அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 8-வது முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றொருபுறம் இங்கிலாந்து அணியும் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜூனியர் உலக கோப்பையை முதன்முறையாகக் கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்தும், ஐந்தாவது முறையாக வெல்ல இந்தியாவும் முனைப்புக் காட்டி வருகின்றன.

இந்திய நேரப்படி மாலை ஆறு முப்பது மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments