கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் - ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஒரு முதலமைச்சரின் தலைமை துணைச் செயலர் பதவிக்கு குறையாத அந்தஸ்தில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவரின் பெயர் ,வயது, முகவரி போன்ற முழு விவரங்களுடன் கொரோனாவால் உயிரிழந்ததற்கான இறப்பு சான்றிதழை அளிக்கவும், கொரோனாவால் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்கள் பற்றிய அறிக்கையும் ஒரு வாரத்திற்குள் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்ற அமர்வு எச்சரித்துள்ளது.நிவாரணம் கேட்டு அரசை அணுகியவர்களுடன் தொடர்பு கொள்ளவும் , பல்வேறு காரணங்களால் அணுகமுடியாமல் இருப்பவர்களைக் கண்டறியவும் அந்த அதிகாரி செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
Comments