நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 75 ஆயிரம் வேட்புமனுக்கள் குவிந்த நிலையில், அவற்றின் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று ஏராளமானோர் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்பப் பெற நாளைமறுநாள் கடைசி நாளாகும். அன்றைய தினமே தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு, சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.
வருகிற 19-ம் தேதி அனைத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கும் ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். வருகிற 22ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
Comments