மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க அப்பல்லோ டயர்ஸ் - டாடா பவர் நிறுவனங்களிடையே ஒப்பந்தம்

0 6893

மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்துடன் டாடா பவர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள அப்பல்லோ டயர் நிறுவனத்தின் வணிகம் மற்றும் பயணியர் வாகன டையர் விற்பனை மையங்களில் டாடா பவர் நிறுவனம் அதன் சார்ஜிங் ஸ்டேஷனை அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

டி.சி, ஏ.சி., டைப் 2, 50 கிலோ வாட் hour வரையிலான விரைவு டி.சி.,சார்ஜிங் மற்றும் பேருந்துகளுக்கான 240 கிலோ வாட் hour விரைவு சார்ஜிங் என இரு சக்கர மற்றும் 4 சக்கர மின்சார வாகன சார்ஜிங் அம்சங்கள் இந்த மையங்களில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments