ஒரே நாளில் 31 பில்லியன் டாலர் இழப்பு..! டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறும் நிலையில் மார்க் ஜுக்கர்பெர்க்

0 7726

அமெரிக்க பங்குச் சந்தைகளில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்ததை அடுத்து, அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெக் ஒரே நாளில் தனது சொத்து மதிப்பில் 31 பில்லியன் டாலரை இழந்திருக்கிறார்.

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முன்னணி சமூக வலைதள நிறுவனங்களை உள்ளடக்கிய மெட்டா நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து, அதன் சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

நியூயார்க் பங்குச் சந்தையில் வியாழக்கிழமையன்று மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 24சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு மற்ற சமூக வலைதளங்களுடனான போட்டியே காரணம் எனக் கூறப்படும் நிலையில், மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மார்க் ஜுக்கர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு 120 பில்லியன் டாலரில் இருந்து 92 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

இதன் மூலம் 2015ஆம் ஆண்டு முதல் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த மார்க் ஜுக்கர்பெர்க், அந்த பட்டியலில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments