சென்னையில் மழைவெள்ளம் வடியாதது குறித்து வழக்கு.. தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.!
சென்னை மாம்பலம் கால்வாயில் போடப்பட்ட கட்டுமானக் கழிவுகளை அகற்றுவதற்கான செலவைத் தொடர்புடைய ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து பெறும்படி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சென்னையில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் வடியாதது குறித்துத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கில், மாம்பலம் கால்வாயில் வெள்ளநீர் வடியாதது குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகளின் கட்டுமானக் கழிவுகளைப் போட்டதால் தான் தண்ணீர் வடியவில்லை எனத் தெரிவித்தனர்.
இதையடுத்துக் கழிவுகளை அகற்றும் செலவை ஒப்பந்தக்காரர்களிடம் பெறும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டு பிப்ரவரி 28ஆம் நாளுக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
Comments