சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உத்தரப்பிரதேச முதலமைச்சர் வேட்பு மனு தாக்கல்

0 3052

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், வரும் சட்டமன்றத் தேர்தலில் கோரக்பூர் நகர்ப்புறத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கோரக்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத், 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதனால் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிச் சட்ட மேலவை உறுப்பினர் ஆனார்.

வரும் தேர்தலில் கோரக்பூர் நகர்ப்புறத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடனிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments