ஜவுளி மற்றும் பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து; கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இடிந்து விழும் அபாயம்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் ஜவுளி மற்றும் பர்னிச்சர் கடையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயை அணைக்கும் பணி 11 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வருகிறது.
சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான அந்த கடையில் ஒரு தளத்தில் ஜவுளிக் கடையும், மற்ற தளங்களில் செல்போன் மற்றும் பர்னிச்சர் கடைகளும் இயங்கி வந்தன. நள்ளிரவில் கடைக்குள் தீ பற்றி மளமளவென எரியத் தொடங்கியது.
ஆடைகள், பர்னிச்சர்கள், விலை உயர்ந்த செல்போன்கள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்த நாசமான நிலையில்,
கட்டிடம் குறுகியதாக இருப்பதால் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாததால் வெளியிலேயே ஜே.சி.பி. இயந்திரம் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு, விபத்துக்குள்ளான கட்டிடம் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் தருவாயில் இருப்பதால், அருகிலிருப்பவர்களை வேறு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments