பப்ஜி மதனுக்கு சொகுசு வசதி - புழல் சிறை ஜெயிலர் சஸ்பென்ட்

0 4124

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் ஆபாசமாக பேசி பண மோசடி செய்த வழக்கில் கைதான பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர, 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனுக்கு சிறையில் படுக்கை, உணவு உள்ளிட்ட சொகுசு வசதிகள் செய்து தர, அங்குள்ள செல்வம் என்ற உதவி ஜெயிலர், மதனின் மனைவி கிருத்திகாவிடம் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட ஆடியோவும், அதற்கு முதற்கட்டமாக, 25ஆயிரம் ரூபாய் தொகையை மதனின் மனைவி கிருத்திகா, கூகுல் பே மூலம் அனுப்பி வைத்த புகைப்படமும் வெளியானது.

சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உதவி ஜெயிலர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து டி.ஜி.பி. சுனில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments