மத்திய அரசில் 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

0 3017
மத்திய அரசில் 8.72லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன

மத்திய அரசில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி 8லட்சத்து 72 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இதுதொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம் ஆகியவை சார்பில் பணியாளர் தேர்வு நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

காலிப்பணியிடங்களை முன்கூட்டியே அல்லது தகுந்த நேரத்தில் நிரப்புமாறு அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் மத்திய அரசு சீரான இடைவெளியில் அறிவுறுத்தல்களை பிறப்பித்து வருகிறது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments