இமாச்சலத்தில் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்ட ரயில்கள்

0 2660

இமாச்சலப் பிரதேசத்தில் கொட்டும் பனிமழைக்கு இடையிலும் ரயில்வே சேவைகள் நீடிக்கின்றன.

ரயில்கள் வெண் பனி போர்த்திய மலைப்பாதைகளில் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கின்றன. கால்கா சிம்லா இடையே நேற்று ரயில்கள் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்டன.

இதே போல் உத்தரகாண்ட்டிலும் கடும் பனிமழை பெய்து வருகிறது. இதனால் கங்கோத்ரி யமுனோத்ரி போன்ற உயரமான மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டு கண்ணுக்கு விருந்தளித்தன.

சாமோலி என்ற இடத்தில் பனிச்சரிவால் சாலைகள் அடைபட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பனியை அகற்றுவதற்காக நீண்ட வரிசை கட்டி காத்திருக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments