டிஜிட்டல் சொத்துக்களுக்கு 30 சதவீதம் வரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால் மிகப்பெரிய அளவில் வரி வசூலாகும் என தகவல்
பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி வடிவிலான டிஜிட்டல் சொத்துக்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரிய அளவில் வரி வசூலாகும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் மோகபத்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், நாட்டில் சுமார் 10 கிரிப்டோ செலாவணிகள் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படுவதாக குறிப்பிட்டார். ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து கிரிப்டோ பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டில் நேரடி வரி மூலம் 11 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 10 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் வரை வந்துள்ளதால், இலக்கை தாண்டி வரி வசூலாகும் என்றும் மோகபத்ரா குறிப்பிட்டார்.
Comments