பள்ளி வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானை ; அச்சமடைந்த மாணவர்கள்

0 3619
பள்ளி வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானை ; அச்சமடைந்த மாணவர்கள்

கர்நாடகா மாநிலம் மைசூரில், காட்டு யானை ஒன்று பள்ளி வளாகத்திற்குள் புகுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்தனர்.

நாகரஹோளே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள், கடந்த சில நாட்களாக உனசூர் தாலுக்காவிற்கு உட்பட்ட நாகாபுரா கிராமத்தில் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாகாபுராவில் உள்ள அரசுப்பள்ளிக்குள் திடீரென ஆக்ரோஷமாக புகுந்த காட்டு யானை நீண்ட நேரமாக ஆங்கேயே சுற்றியது.

இதனை அங்கிருந்த நபர் செல்போனில் வீடியோ பதிவு செய்த நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments