தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயீரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 993 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் ஆயிரத்து 751 பேருக்கும், கோவையில் மேலும் ஆயிரத்து 426 பேருக்கும், செங்கல்பட்டில் ஆயிரத்து 97 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 23 ஆயிரத்து 84 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 30 பேர் உயிரிழந்த நிலையில், 1 லட்சத்து 66ஆயிரத்து 878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments