ஹிஜாப் அணிந்தவர்களைக் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கோரி போராட்டம்
கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்தவர்களைக் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கோரியும், அதற்குப் போட்டியாகக் காவித் துண்டு அணிந்து செல்ல அனுமதிக்கக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குந்தப்புரா என்னும் ஊரில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவியரை அனுமதிக்க மறுத்து வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர்.
ஹிஜாப் போராட்டத்துக்குப் போட்டியாகப் பத்ராவதி கல்லூரியில் கழுத்தில் காவித்துண்டு போட்டுக்கொண்டு வந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் ஹைஜாப்போ, காவித் துண்டோ அணிந்துகொண்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
மத வழக்கத்தைக் கடைப்பிடிப்பதற்காக யாரும் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments