பனையூர் குப்பத்தில் உள்ள கடற்கரையில் கரை ஒதுங்கிய உருளையால் பரபரப்பு

0 3246
பனையூர் குப்பத்தில் உள்ள கடற்கரையில் கரை ஒதுங்கிய உருளையால் பரபரப்பு

சென்னை பனையூர் குப்பத்தில் உள்ள காப்பர் கடற்கரையில் பெரிய அளவிலான சிவப்பு நிற உருளை கரை ஒதுங்கியது.

10 அடி நீளம், 4 அடி அகலம் உள்ள சுமார் 2 டன் எடையுள்ள சிவப்பு நிற பெரிய உருளை சங்கிளியுடன் கரை ஒதுங்கியதை பார்த்த அப்பகுதி மீனவர்கள், அதனை கரைக்கு எடுத்து வந்து கானத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் அளித்து விசாரணை நடத்தியதில், இந்த உருளை, மிதவை கப்பல்களை கடலில் நிலை நிறுத்த பயன்படுத்தப்படும் Ship Boyee என தெரியவந்தது. மேலும் ஏதேனும் கப்பலில் இருந்து சங்கிளி துண்டிக்கப்பட்டு Ship Boyee கரை ஒதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments