கொலராடோ மாகாணத்தில் ஒரே இரவில் பெய்த தீவிர பனிப்பொழிவு..
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பெய்த பனிப்பொழிவின் தீவிரத்தை டைம் லேப்ஸ் முறையில் எடுக்கப்பட்ட வீடியோ நன்கு வெளிக்காட்டியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை நிலவிய தீவிர பனிப்பொழிவு அதில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் மற்றும் பனி மழை எச்சரிக்கை அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பனிப்புயலானது டெக்ஸாஸ் மற்றும் கொலராடோவில் இருந்து மத்திய மேற்குப்பகுதிகள் வழியாக வடக்கு நியூயார்க்கை நாளை காலை சென்றடையும் என தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ராக்கி மலைத்தொடர் முதல் நியூ இங்கிலாந்து வரை வசிக்கும் சுமார் 10 கோடி மக்களுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவிர பனிப்பொழிவால் நேற்று காலையில் சுமார் 2 ஆயிரத்து 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்ததது குறிப்பிடத்தக்கது.
Comments