செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 29 பேர் மீட்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் இருந்த 29 பேரை வருவாய் துறையினர் மீட்டனர்.
டி.ஒரத்தூர், பா.கிள்ளனூர், ஏமம், களத்தூர் கிராமங்களை சேர்ந்த 29 பேர், சின்னபாபுசமுத்திரத்தில் உள்ள செங்கல் சூளையில் கடந்த 2 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக தங்க வைக்கப்பட்டு செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அங்கு சென்ற வருவாய் மற்றும் காவல்துறையினர் கொத்தடிமைகளாக தங்கியிருந்த 29 பேரை மீட்டு, அறிவுரை வழங்கி அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். அதோடு செங்கல் சூளை உரிமையாளரை எச்சரித்து சென்றனர்.
Comments