இஸ்ரேலின் ஹேக்கிங் தொழில்நுட்ப மென்பொருளை சோதனை செய்து பார்த்ததாக எஃப்.பி.ஐ தகவல்
இஸ்ரேலின் NSO Group நிறுவனத்தின் ஹேக்கிங் தொழில்நுட்ப மென்பொருளை சோதனை செய்து பார்த்ததாகவும் , ஆனால் அதை எந்த ஒரு விசாரணைக்காகவும் பயன்படுத்தவில்லை எனவும் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
NSO நிறுவனம் தான் சர்ச்சைக்குரிய பெகாசஸ் மென்பொருளை உருவாக்கி உள்ளது. தீவிரவாதிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொடூர குற்றவாளிகளை பிடிக்க ஏதுவாக இந்த ஹேக்கிங் மென்பொருளை உருவாக்கியதாக NSO நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக ஆப்பிள் நிறுவனம் NSO நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. NSO நிறுவனத்தை அமெரிக்காவின் தொழில் வர்த்தக துறை கறுப்பு பட்டியலில் சென்ற ஆண்டு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments