ஒரு நாளைக்கு சராசரியாக 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்து வரும் மெட்டாவெர்ஸ்
ஃபேஸ்புக் நிறுவனம், அதன் தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா வெர்ஸ் என மாற்றிய பிறகு, 4-ஆம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட குறைந்த சந்தாதாரர்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஆம் நிதி ஆண்டின் அடுத்தடுத்த இரண்டு கால் ஆண்டுகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் தினசரி பயன்பாட்டாளர்கள் 193 கோடியாக உள்ளனர்.
நான்காவது காலாண்டில் 10.3 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர லாபத்தை மெடாவர்ஸ் சம்பாதித்துள்ள நிலையில், இது சென்ற ஆண்டின் நான்காவது காலாண்டை ஒப்பிடும்போது 8 சதவீதம் குறைவு. நேற்றைய நிலவரப்படி மெட்டாவர்ஸின் பங்கு விலை 22 சதவீதம் குறைந்து 250 டாலராக உள்ளது.
Comments