7 ஆண்டுகளுக்கு முன் வெள்ளி பொருட்கள் களவு போனதாக தொடரப்பட்ட வழக்கு... 2 அர்ச்சகர்கள் கைது
மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோவில் படிச் சட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளித் தகடுகளை திருடி விற்பனை செய்ததாக அந்த கோவிலின் தலைமை குருக்களும், அர்ச்சகரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
2014-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கோவிலின் தலைமை குருக்களான ஸ்ரீனிவாச ரங்க பட்டர், அர்ச்சகர் முரளிதரதீர்சிதர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் படிச் சட்டத்திலிருந்து பெயர்த்தெடுத்து திருடப்பட்ட சுமார் 15 கிலோ எடையுள்ள வெள்ளி தகடுகளை ஏ.ஆர்.சி காமாட்சி என்னும் நகை கடையில் கொடுத்து உருக்கியதோடு, அதற்கு பதிலாக நன்கொடையாளர்கள் மூலம் பணம் திரட்டி போலியான வெள்ளி தகடுகளை செய்ய திட்டமிட்டு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
ஏ.ஆர்.சி காமாக்ஷி நகை கடையில் இருந்த 15 கிலோ எடை உள்ள வெள்ளி தகடுகளை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments