நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தீவிரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற அமைப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி துவங்கியது. அந்தந்த கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைவதால், மண்டல அலுவலகங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.
திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்ற நிலையில், காங்கிரஸுக்கு இடம் ஒதுக்கீடு செய்வதில் இரு கட்சிகளுக்கு இடையேயான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்றைக்குள் இடப்பங்கீடு இறுதியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments