நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு... விமர்சித்த பாஜக தலைவர்கள்

0 3546

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசிய பேச்சை பாஜக தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

நேற்று மக்களவையில் பேசிய ராகுல்காந்தி, நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி வளர்ந்துகொண்டே வருவதாகத் தெரிவித்தார். மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவை மன்னராட்சி போல் ஆள்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதை விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி, சீனாவைப் புகழ்ந்தும், இந்தியா ஒரு நாடு இல்லை என்றும் பேசும் ராகுல்காந்தி குழப்பமானவர் எனத் தெரிவித்துள்ளார். நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியன குறித்துப் பேசியதற்காக ராகுல்காந்தி மன்னிப்புக் கோர வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவிதுதுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments