விழுப்புரம் கனிமவளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை... 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு
விழுப்புரம் மண்டல கனிம வளத்துறை இணை இயக்குநர் ஆறுமுக நயினார் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெல்லை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநராக பணிபுரிந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக 2 கோடி ரூபாய் வரை சொத்துச் சேர்த்துள்ளதாக ஆறுமுக நயினார் மீது அம்மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் பேரில் விழுப்புரத்திலுள்ள அவரது வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Comments