ஈகுவடாரில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு
தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.
கடந்த திங்கட்கிழமை தலைநகர் Quito-வில் வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்த ஏற்பட்ட நிலச் சரிவால் குடியிருப்புகள் மூழ்கடிக்கப்பட்டன. சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.
சேதங்களில் சிக்கி 52 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியதால் பலர் முகாம்வாசிகளாக மாறினர்.
Comments