எலி மருந்து தடவிய கேரட்டை சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு
கோயம்புத்தூர் மாவட்டத்தில் எலி மருந்து தடவிய கேரட்டை சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
பொள்ளாச்சி அடுத்த செங்குட்டைப்பாளையத்தில் தேவசித்து என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடையில் எலித்தொல்லை அதிகரித்ததால் கேரட்டுகளில் எலிமருந்து தடவி கடையில் வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையறியாத கடை உரிமையாளரின் மகள் கேரட்டுகளை சமைத்து சாப்பிட்ட நிலையில், மயக்கமடைந்தாக சொல்லப்படுகிறது.மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த அவர் உயிரிழந்த நிலையில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Comments