உக்ரைனுக்கு உதவி செய்ய மேலும் 3000 போர் வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனுக்கு உதவியாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மேலும் 3 ஆயிரம் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உக்ரைனின் எல்லைக்கு அருகில் ரஷ்யா ஒரு லட்சம் வீரர்களைக் குவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் வில்செக்கை தளமாகக் கொண்ட சுமார் ஆயிரம் வீரர்களைக் கொண்ட ஸ்ட்ரைக்கர் படைப்பிரிவு ருமேனியாவுக்கு அனுப்பப்படும் என்று பென்டகன் கூறியுள்ளது.
இதேபோல் சுமார் ஆயிரத்து 700 வீரர்கள் கரோலினாவின் ஃபோர்ட் ப்ராக்கில் இருந்து போலந்துக்கு அனுப்பப்படுவார்கள். முந்நூறு வீரர்கள் ஃபோர்ட் பிராக்கில் இருந்து ஜெர்மனிக்கு செல்வார்கள் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
Comments