சர்வதேச விண்வெளி மையத்தை பசிபிக் கடலில் மூழ்கடிக்க நாசா திட்டம்
சர்வதேச விண்வெளி மையத்தை 2031ம் ஆண்டு பசிபிக் பெருங்கடலில் மூழ்கடிக்க நாசா திட்டமிட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த விண்வெளி ஆய்வகம், பூமியிலிருந்து 227 கடல் மைல் தொலைவில் சுற்றி வருகின்றது. இந்நிலையில் அதன் ஆயுட் காலம் முடிவடைந்ததும் விண்வெளி மையத்தை பசிபிக் கடலில் மூழ்கடிக்க நாசா திட்டமிட்டுள்ளது.
வரும் 2030ம் ஆண்டு முதல் இதற்கான பணிகள் துவங்கும் என்று கூறியுள்ள நாசா அதிகாரிகள், தெற்கு பசிபிக் பெருங்கடலில் மக்கள் வசிக்காத பகுதியான பாயிண்ட் நெமோ என்று அழைக்கப்படும் பகுதியில் சர்வதேச விண்வெளி மையத்தை விழ வைப்பதே திட்டம் என்று கூறியுள்ளனர்.
Comments