மைக்கேல் ஜாக்ஸனைப் போலவே தோற்றம் கொண்ட இளைஞர்

0 3018

மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் போல இருப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக புகார் கூறப்பட்ட இளைஞர் தனது இளமைக்கால புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்தில் வசிக்கும் 28 வயதான ஃபேபியோ ஜாக்சன் என்பவர் மைக்கேல் ஜாக்ஸனைப் போன்ற தோற்றம் கொண்டவர். அவரைப் போலவே நடை, உடை பாவனைகளால் ஃபேபியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மைக்கேஸ் ஜாக்ஸனைப் போல தோற்றம் ஏற்படுவதற்காக ஃபேபியோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால் தனது 11 வயதில் இருந்தே தான் மைக்கேல் ஜாக்ஸனைப் போல இருக்கும் புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments