ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

0 6423

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் சேர்த்தது. கேப்டன் யாஷ் துல் 110 ரன்களும், ஷேக் ரஷீத் 94 ரன்களும் குவித்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறினர். 41 புள்ளி 5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய வீரர் விக்கி ஆஸ்ட்வெல் 3 விக்கெட் வீழ்த்தினார். 5ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments