தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த 4 விசைப் படகுகள் பறிமுதல்
ராமேஸ்வரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த நான்கு விசைப் படகுகளை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் வைத்து பறிமுதல் செய்தனர்.
இரட்டை மடி,சுருக்குமடி, நைலான் மடி மற்றும் அதிக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடை உத்தரவை மீறி, மண்டபம் பாம்பன் பகுதியின் சில மீனவர்கள் மீன் பிடிப்பதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய படகுகளைப் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை முடியும் வரை மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments