சூப்பர் மார்க்கெட்டில் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள்
சென்னையை அடுத்த குன்றத்தூரில், மர்ம நபர் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மணிகண்டன் நகரில் சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வரும் சுதா என்பவர், நேற்றிரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு சென்ற நிலையில், இன்று காலை வந்து பார்த்த போது கடையின் ஷட்டரில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த பணம் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
நேற்றிரவு அதே பகுதியில் உள்ள மற்றொரு மளிகைக் கடையிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments