பாலியல் வீடியோவை வெளியிடப்போவதாகக் பணம் கேட்டு மிரட்டியவர் கொலை.. மூவர் கைது

0 2865

டெல்லியில் பாலியல் வீடியோவை வைத்துப் பணம் கேட்டு மிரட்டிய தொழிலாளியைக் கொன்று உடலை டிராலிபேக்கில் வைத்து மெட்ரோ ரயில் நிலையத்தில் போட்டுச் சென்ற தொழிலதிபரையும் அவருக்கு உடந்தையாக இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

துணிநிறுவனத் தொழிலாளி அதன் உரிமையாளருடன் பாலியல் உறவில் இருந்த வீடியோவைச் சமூக வலைத்தளத்தில் வெளியிடப் போவதாகக் கூறி மிரட்டிப் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஒரு விடுதிக்கு ஊழியரை வரவழைத்துத் தனது உறவினர் ஒருவரின் துணையுடன் அவரைக் கொன்று உடலை டிராலிபேக்கில் வைத்துக் காரில் ஏற்றி டெல்லி சரோஜினி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளனர். கொல்லப்பட்டவரின் உடை, தொப்பி உள்ளிட்ட பொருட்களை மற்றொரு ரயில் நிலையத்தில் போட்டுள்ளனர்.

தொழிலதிபரின் உறவினர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வந்து ஜனவரி 28ஆம் நாளில் கொலையைச் செய்துவிட்டுக் கொல்லப்பட்டவரின் செல்போனை எடுத்துக் கொண்டு ஊருக்குச் சென்றுள்ளார்.

கேட்பாரற்றுக் கிடந்த டிராலிபேக்கில் உடல் இருந்ததைக் கண்டறிந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி பதிவை ஆய்வு செய்து அதைக் கொண்டுவந்து போட்ட கொலையாளிகளை அடையாளம் கண்டனர்.

இதன் அடிப்படையில் தொழிலதிபரையும், அவர் உறவினர் உள்ளிட்ட இருவரையும் கைது செய்து விசாரித்ததில் கொலையின் பின்னணி தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments