தேர்தலையொட்டி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல்நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவு

0 2651

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை திருப்பி ஒப்படைக்குமாறு தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உரிமம் பெறப்பட்ட நிலையில் 22 ஆயிரம் துப்பாக்கிகள் இருப்பதாகவும், இவற்றில் வங்கி பாதுகாப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் தவிர தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பெற்ற மற்ற துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments