பிரபல உணவுப்பிரியருடன் சாலட் உண்ணும் போட்டியில் போட்டி போட வந்திருந்த 2 முயல்கள் படுதோல்வி.!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சாலட் உண்ணும் போட்டியில் பிரபல உணவுப்பிரியை Raina Huang உடன் 2 முயல்கள் போட்டி போட்டு படு தோல்வியை சந்தித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சாப் ஸ்டாப் என்ற உணவகம் ஏற்பாடு செய்திருந்த சாலட் உண்ணும் போட்டியில் ராட்சத முயல் வளர்ப்பாளரான லூயிஸ் மோசஸ் என்பவர், தான் வளர்த்த 2 முயல்களை போட்டிக்கு அழைத்து வந்திருந்தார்.
அப்போது ரெய்னா ஹுவாங்-க்கு போட்டியாக ஹனி என்ற முயலை அவர் முதலில் களத்தில் இறக்கினார். அப்போது லூயிஸ் மிகவும் எதிர்பார்க்காத வகையில், அந்த முயல் எதையுமே சாப்பிடாமல் விழி பிதுங்கி நின்றது.
அந்த முயல் தோல்வியை சந்தித்த நிலையில் அதற்கடுத்தபடியாக மற்றொரு ராட்சத முயலான Precious-ஐ லூயிஸ், போட்டி ஏற்பாட்டாளர்களின் அனுமதி பெற்று பங்கேற்கச்செய்தார். அந்த முயலும் ஒரு இலையைக்கூட சாப்பிடாமல் திரும்பியது.
உணவுப்பிரியையுடன் போட்டி போட முயல்களை அழைத்து வந்த லூயிஸ் மோசஸ்-க்கு தோல்வியே மிஞ்சியது. பின்னர் இது தொடர்பாக பேசிய அவர், இந்த தோல்வி தனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என கூறியதுடன், முயல்கள் தேவைக்கேற்ப குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மட்டுமே உணவை உண்பதாகவும், நாய்கள் போல் அல்லாமல் இயல்பாக குறைந்த அளவிலேயே உண்ணக்கூடியவை தான் எனவும் தெரிவித்தார்.
இந்த போட்டியில் உணவுப்பிரியை Raina Huang 10 நிமிடங்களில் ஒன்றரை கிலோ சாலட் சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது
Comments