குண்டூரில் மூவண்ணத்தில் மிளிரும் ஜின்னா டவர்

0 6224

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஜின்னா டவரில் குடியரசு நாளன்று தேசியக் கொடி ஏற்ற பாஜகவினர் முயன்ற நிலையில், அதற்குத் தேசியக் கொடியின் மூவண்ணம் பூசப்பட்டு அழகூட்டப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் தலைவர்களை நினைவுகூரும் வகையில் குண்டூரில் ஜின்னா டவர் கட்டப்பட்டுள்ளது. குடியரசு நாளில் இந்த டவரில் தேசியக் கொடி ஏற்ற முயன்றதால் சர்ச்சையானது.

இந்நிலையில் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் குண்டூர் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது முஸ்தபா டவருக்குத் தேசியக் கொடியின் மூவண்ணத்தைப் பூசி அழகுபடுத்தியுள்ளார். விரைவில் அதில் தேசியக்கொடி ஏற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments