காஞ்சிபுரத்தில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.7 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்..!
காஞ்சிபுரம் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட 7 லட்சம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அங்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் -வாலாஜாபாத் சாலை வழியாக சென்ற டாடா இண்டிகா காரை அதிகாரிகள் சோதனையிட்ட போது, உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 7 லட்ச ரூபாய் சிக்கியது.
Comments