பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு ஆன்லைன் மூலம் தொடக்கம்

0 51134

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கான பொது பிரிவு கலந்தாய்வு முதன் முறையாக ஆன்லைன் மூலம் துவங்கியது. 

https://tnmedicalselection.net/ என்ற இணையத்தில் 5 ஆயிரத்து 822 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த இணையத்தில் உள்ள choice filling என்ற ஆப்ஷன் மூலம் எந்தெந்த கல்லூரிகள் வேண்டும் என மாணவர்கள் தேர்வு செய்யலாம். கல்லூரிகளை சேர்க்கவும், விலக்கவும், பட்டியலின் வரிசையை மாற்றியமைக்கவும் இணையத்தில் வசதி உள்ளது.

பட்டியலை முடிவு செய்தவுடன் choice lock என்ற ஆப்ஷன் மூலம் மாணவர்கள் இறுதி செய்து கொள்ளலாம். பிப்ரவரி 5ம் தேதி மாலை 5 மணிக்குள் விருப்பப் பட்டியலை மாணவர்கள் இறுதி செய்ய வேண்டும். அதன் பின், பிப்ரவரி 7 முதல் 10 ஆம் தேதி வரை மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த 3 மையங்களில் ஒன்றுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் அழைக்கப்படுவார்கள்.

மாணவர்களுக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற முடிவுகள் பிப்ரவரி 15ம் தேதி வெளியாகும் நிலையில், பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 22ம் தேதி மாலை 3 மணிக்குள் கல்லூரிகளுக்கு  மாணவர்கள் நேரில் சென்று அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments