போர் விமானங்களை பெண்கள் இயக்குவது இனிமேல் பரிசோதனை அல்ல... நடைமுறை - அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 2279

போர் விமானங்களை பெண்கள் இயக்குவது இனிமேல் பரிசோதனை அல்ல- நடைமுறை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பெண் அதிகாரிகளை நியமிக்கலாம் என்றது உச்சநீதிமன்றம் . இதனையடுத்து பெண் விமானிகள் அங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.வரும் ஜூன்மாதத்தில் இந்தப் பயிற்சி நிறைவு பெறுகிறது. பயிற்சியில் ஈடுபட்ட 16 பெண் விமானிகளும் பரிசோதனைக் காலத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

விரைவில் பாதுகாப்புத் துறை பொறுப்புகளில் பெண்கள் பெருமளவில் நியமனம் செய்யப்படுவார்கள். பரிசோதனை முறையில் மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு பெண் விமானிகள் நியமனத்தை அறிமுகம் செய்தது தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டதாக  ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments