நடிகர் விஜய் வழக்கு ஒத்திவைப்பு

0 5050

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதப்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த சுமார் 63லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ எக்ஸ் 5 சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதப்படுத்தியதாக 400சதவீத அளவுக்கு அதாவது 30லட்சத்து 23ஆயிரம் ரூபாய் நடிகர் விஜய்க்கு வணிகரி வரித்துறை அபராதம் விதித்தது.

அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரபட்டதையடுத்து வழக்கு பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments