முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய அவசியமில்லை - அமைச்சர் துரைமுருகன்
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை தற்போது மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழக உரிமைகளையும் விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அணையின் உறுதி குறித்து சீராய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இது குறித்து துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், அணை தொடர்பான நிலை அறிக்கைக்கான பதில்மனுவை வரும் 4ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உச்சநீதிமன்றத்தில் தகுந்த முறையில் எடுத்துரைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Comments