பிப். 12, 13 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் ஐ.பி.எல் மெகா ஏலம்.!
மார்ச் மாதம் இறுதியில் தொடங்க உள்ள ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது.
318 வெளிநாட்டு வீரர்கள், 896 இந்திய வீரர்கள் என மொத்தம் 1,214 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுள் 590 வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கான அடிப்படை விலையையும் ஐ.பி.எல் நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது.
இதில் தமிழக வீரர் நடராஜனுக்கு அடிப்படை விலையாக ஒரு கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ள கேப்டன் தோனி மெகா ஏலத்தில் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments