புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்.!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
இதனால் மின் பராமரிப்பு மற்றும் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மற்றும் மின்துறை அலுவலகங்களில் கூட்டமாக கூடுவதை தடுக்க மின்துறை வளாகத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்துறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காரைக்காலிலும் இதே கருத்தை முன்னிறுத்தி மின் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
Comments