ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டி, தனக்கு உதவிய பிரதமர் மோடியை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டுமென விருப்பம்.!

0 5712

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டி, தனக்கு உதவிய பிரதமர் மோடியை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளார்.

கமலாத்தாள் பாட்டியின் சேவையை பார்த்து ஆனந்த் மகேந்திரா, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோரும் பாரத் கேஸ் மற்றும் ஹெச்.பி கேஸ் போன்ற நிறுவனங்களும் இவருக்கு பல உதவிகளை செய்து வருகின்றன.

அந்த வகையில், பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் இவருக்கு மாதந்தோறும் இரண்டு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனக்கு உதவிய பிரதமரை டெல்லிக்கு சென்று சந்திக்க அனுமதிக்க வேண்டுமெனவும்,  இல்லையெனில் தன்னுடைய இடத்திற்கு பிரதமர் வந்து இட்லி சாப்பிட்டு செல்லவேண்டும் எனவும் மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments