தங்கத்தை தலை முடி விக்கில் மறைத்து வைத்து கடத்த முயற்சி..! ஆடைக்குள்ளும் மறைத்து எடுத்து வந்தது அம்பலம்

0 3381

தலை முடி விக்கில் மறைத்து வைத்து இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 22லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய மூன்று பெண் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது, பெண் ஒருவரின் தலையில் கொண்டை வடிவில் பொருத்தப்பட்டிருந்த விக்கிற்குள் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்தது தெரியவந்தது.

மற்றொரு பெண்ணின் ஆடைக்குள் இருந்தும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 525கிராம் கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments