சர்வீஸ் வயரில் ஏற்பட்ட மின்கசிவால் பற்றி எரிந்த குடிசை வீடு : உயிர் தப்பிய பெண்மணி

0 1955

imageகள்ளக்குறிச்சி அருகே மின் கசிவால் குடிசை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்த நிலையில், வீட்டில் இருந்த பெண்மணி உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினார்.

கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த வள்ளி என்பவர் நேற்றிரவு தனது குடிசை வீட்டில் படுத்திருந்தார். அப்போது திடீரென மேற்கூரை தீப்பற்றி எரியத் தொடங்கி இருக்கிறது.

வள்ளி உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், வீட்டிற்குள் இருந்த சிலிண்டர் வரை தீ பரவி, ரப்பர் குழாய் சேதமடைந்து எரிவாயு வெளியேறி தீ மேலும் அதிகரித்திருக்கிறது.

 

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன. மின் கம்பத்தில் இருந்து குடிசைக்கு செல்லும் பிரதான சர்வீஸ் வயரில் கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments