நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

0 2999

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்தும் செல்லும் வகையில் உள்ளதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 5ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்றும் குடைக்கான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments